மனதிற்குள்
ஒளிந்திருக்கும் 
உன்னை 
வெளியே இழுத்து
வஞ்சனையாக சிரிக்கும்
வழக்கமான மாலை நேர மழைச்சாரல் … !
வெளியே இழுத்து
வஞ்சனையாக சிரிக்கும்
வழக்கமான மாலை நேர மழைச்சாரல் … !
விரைந்தோடிய
வருடங்களை 
கணக்கிடும் என்னால்
அதில் நிகழ்ந்த நிகழ்வுகளை
வரையறுக்க முடியவில்லை…!
கணக்கிடும் என்னால்
அதில் நிகழ்ந்த நிகழ்வுகளை
வரையறுக்க முடியவில்லை…!
எனக்கு
வரும் 
துன்பங்களுக்கெல்லாம் 
உன் பிரிவை காரணமாய் நினைத்து
வரும் கண்ணீரும் பிடிக்கவில்லை… !
உன் பிரிவை காரணமாய் நினைத்து
வரும் கண்ணீரும் பிடிக்கவில்லை… !
இதயத்தில் துணிவும்,
இயல்பான வாழ்கையும்
அமைந்தால் போதும் !
இந்த மழைச்சாரல் எல்லாம்
மறைந்தே போகும் !!!






2 comments :
Migavum Nanraaga ullathu :-)
Nice lines
Post a Comment