அயல்நாடு செல்லும் அழகான நட்பிற்கு !வேலைக்காக வெளியூர் வந்த எனக்கு

எல்லாமே புதிதாய் தான் இருந்தது..

உறவுகளின் பிரிவில் கண்ணீருடன்

நான் உன்னை கடந்து சென்றபோது

கையைப் பிடித்து எதிரில் அமர்த்தினாய்..

எவ்வளவு நேரம் அழுதிருந்தேன்

என்று அறியவில்லை

அவ்வளவு நேரமும் அமைதியாய் பார்த்திருந்தாய்..

அரவணைத்து நீ ஆறுதல் சொன்ன நிமிடம்தான்

நமக்குள் உண்டான நட்பின் அடையாளம்..

மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது..

என்றுமே குறையாத பரிவும்,

வழிநடத்தும் உன் வார்த்தைகளும்

இனி வரும் மூன்று மாதங்களில்

மறைந்தே இருக்கும் என்றுணரும்போது

கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கிறது..

இருப்பினும் உன் கனவுகள் நிறைவேற

என் வாழ்த்துக்கள் !!!

Dedicated to my dear friend Hema and wishing her all happiness there in US for next few months..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments :

Vijay said...

nice

Post a Comment