பாடம்

கோயிலில்
ஒரு குழந்தை
கையில் மரப்பாச்சி பொம்மையுடன் ,
அழகாய் கையில் ஏந்தி
ஆசையாய் கொஞ்சி விளையாடியபடி ...
கொஞ்ச நேரத்தில்
குழந்தையின் கையிலிருந்த
பொம்மையை வாங்கிவிட்டு
அழகிய புது பொம்மையை
கொடுத்தாள் அம்மா...
தனக்குப்
பிடித்த பொம்மையை இழந்தபின்
புது பொம்மையை தூக்கி எறிந்துவிட்டு
அழத்தொடங்கியது குழந்தை ...!
நிற்காத குழந்தையின் அழுகையில்
அருமையான பாடம் ...!
கற்க வேண்டியது நானல்ல
கடவுளே நீதான் ...!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments :

Anonymous said...

adaa..
idhu romba nalla theme aaga irukkey. congrats keep going.
venkatramani

Post a Comment