மழலையின் மனதில் !!!கோடை விடுமுறை !
என் பெற்றோர்களுக்கு...
பல்லாங்குழி
விளையாட்டு,
கிணற்றுக்குள்
நீச்சல்,
பாட்டியிடம்
ராஜா கதை,
உறவினர்
குழந்தைகளுடன்
ஊர்க்
கோவில் திருவிழா !!!
எனக்கு...
கணினியில்
சீட்டாட்டம்,
நீச்சல்
குளத்தில் பயிற்சி
கார்டூன்
சேனலில் பவர்ரேஞ்சர்ஸ்,
முன்
அறிமுகமில்லா குழந்தைகளுடன்
சம்மர்
கேம்ப் !!!
நீங்கள் பெருமைப்படுகிறீர்கள் !
ஆனால்,
நான் ஏங்குகிறேன்
உங்களைப் போல்
கோடையைக் கொண்டாட !!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment