மன இறகுகள்


புத்தகத்தினூடே ஒளித்து வைக்கும்
மயிலிறகைப் போல்
வலிகளையெல்லாம் புன்னகைக்குள்
மறைத்து வைக்கிறேன் !
ஒவ்வொரு பக்கத்தின் மயிலிறகும்
உன்னால் எடுத்து
அன்பால் முத்தமிடப்படுகிறது !
எல்லாம் சேர்த்து மயில் தோகையாக்கி
பரிசளித்துச் சிரிக்கிறேன் !
இந்த சிரிப்பும் உன் அன்பும்
எப்போதும் போல்
வாழ்க்கையை எனதாக்கி
பூக்கள் தூவிச் செல்கிறது !!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments :

Vijayakumar S said...

Nice lines... Keep going....

Post a Comment