வாழ்ந்து செல்வோம்


குளிர்ச்சி தராத தென்றல்,
அமைதி தராத அலைகடல்,
மழலைச் சொற்களைக் கூட
கேட்க நேரமில்லாமல்
நகர வாழ்கையில்
ஒரு நரகம்...!

தாத்தா,பாட்டி,மாமா,அத்தை...
உறவுகளின் சுவாசம் அறியாமலே
இன்றைய குழந்தைகள்...!
உறவுகளை உபசரிக்கத் தெரியாமல்
தனித்தீவுகளாய் ஒரு வாழ்கை...!
இயந்திரங்களுக்கு அடிமையாகி
நாமும் ஒரு இயந்திரமாய்...!

பணத்தின் பின்னே தீவிரமாய் அலைவதால்
நாமும் தீவிரவாதிதான்...!
அன்பு காட்டாமல் பெற்றோர்களை
முதியோர் இல்லம் தேடவைப்பதால்
நாமும் கொலையாளிதான்
அவர்களின் நம்பிக்கையைக் கொள்வதால்...!

மனம்விட்டு அழுவதற்கும்
மகிழ்ச்சியை பகிர்வதற்கும்
உறவுகளின்றி போலியாய் ஒரு வாழ்கை...!
வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும்
தீர்வு காண முடியும்
மனிதன் மனிதனாக இருந்தால்...!

பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையேயான வாழ்கையை
அன்புகாட்டி அமைதியாய்
வாழ்ந்து செல்வோம்...!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments :

பிரபாகரன் பழனிசாமி said...

இந்து .. உங்கள் ஒவ்வொரு கவிதையிலும்.., உங்களின் மனப்பகுவத்திலும் வார்த்தைகளின் நேர்த்தியிலும் அளக்கமுடியாத உயரத்தை எட்டியிருப்பதை என்னால் உணர முடிகிறது ..!! எல்லா தருணங்களையும் ஒரே கவிதையில் சொன்ன விதம் - நிஜம் .! எளிமையும் உண்மையும் எந்தக் கவிதையில் இருக்கிறதோ அந்தக் கவிதையின் உயரமும் கண்டிப்பாய் ஓப்பிட முடியாத உயரம் தான்..!! அன்பிற்காக வாழ நீங்கள் அனைவரையும் அழைக்கும் வரிகள் " சேர வாரீர் செகத்தீரே " என்ற தாயுமானவரின் வரிகளை எனக்கு நினைவூட்டுகிறது! பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான வாழ்க்கையில் எத்தனை காசு ஈட்டினாலும் எல்லாம் அன்புக்காக மட்டும் செலவழியுங்கள் என்று சொல்லும் உங்கள் உணர்வு பிடித்திருக்கிறது ! அருமை ! மேலும் உங்கள் வரிகளுக்கும் ஊக்கங்களுக்கும் காத்திருக்கும் பிரபா .... (நானும்!!)என்றும் அன்புடன்

indu said...

உன்னோட பாராட்டிற்கு என்னோட நன்றி!!!

அருள்மொழிவர்மன் said...

நகர வாழ்கையில்
ஒரு நரகம்...! -‍ உண்மை

நாமும் கொலையாளிதான்
அவர்களின் நம்பிக்கையைக் கொள்வதால்...!
- சிந்திக்க‌ப்பட‌ வேண்டிய‌ வரிக‌ள்.
(கொல்வதால் சரியான வார்த்தை, instead of கொள்வதால்)

அருமையான படைப்பு...வாழ்த்துக்க‌ள்

Post a Comment