நிகரில்லா நிஜங்கள்



காதலும் கண்ணியமும் கலந்து
காலமெல்லாம் காத்திருந்த
உன் பொறுமைக்கு
நன்றி இயம்ப
நானென்ன செய்வேனடா?

அருகில் இருந்தாலும்
விலகிப் போனாலும்
'நான் இருக்கிறேன்'
என்ற நம்பிக்கையைக் கொடுக்க
இன்னொருவர் இல்லையடா!

இன்று பூத்த மலராய்
என்னை புன்னகைக்க வைத்து
இந்த உலகத்தையே மறக்கச்செய்ய
உன்னையன்றி வேறு யாரால் முடியுமடா?

சீண்டல் வார்த்தைகளால் அக்கறைக்காட்டி
தீண்டல்களில்லா இந்த அழகான அன்பை
அனுபவிக்க,
ஆயிரம் பிறவிகள் போதாதடா!

முத்தாய் நீ இருந்தும்
உன்னை பிரசவிக்கும்
சிப்பியாய் நான் இல்லாமல்
போனதென்னவோ கொடுமைதான்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment