சபிக்கப்பட்ட கம்பிகள்பகலில் ரயில் பயணமெல்லாம்

கஷ்டமான பயணம்

என்ற எண்ணம்தான் எனக்கும்...

கைப்பேசியில் சிறிதுநேரம்,

வாரப்பத்திரிக்கையில் சிறிதுநேரம்,

உறக்கத்தில் சிறிதுநேரம்,

இதன் பிறகும்

கடந்து செல்லா நேரமும்,

முடிந்துவிடா பயணமும்

எவ்வளவோ இருக்க

அப்போதுதான் கண்களில் பட்டது

அந்த ஜன்னலோர கம்பிகள்!

மலைகளையும், காடுகளையும்

எத்தனையோ மனிதர்களையும்

படம்பிடித்து காட்டி வந்தது!

என் நேரமும் தூரமும் குறைந்தது!

இறங்கும்போது,

"என்னைப் பிரிந்தும், மறந்தும்

சென்ற நண்பர்கள் முகங்களையும்

என் கண்களுக்கு காட்டியிருந்தால்

உன் சாபமெல்லாம் நீங்கி

இந்தப் பகல்பயணக் கொடுமையிலிருந்து

நீயும் விடுபட்டிருப்பாயோ!"

என்று சொல்லத் தோன்றியது

அந்த கம்பிகளிடம்!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

Kutty said...

அந்த ஜன்னலோர கம்பிகலுக்கு எப்பொழுதுதான் சாபம் நீங்கும் ?

indu said...

நீங்கள் காண விரும்பும் நண்பர்களின் முகங்களையும் காட்ட சொல்லுங்கள்...அந்த சந்தோஷத்தில் நீங்களே அந்த கம்பிகளை உடைத்து சாப விமோட்சனம் தருவீர்கள் :)

Post a Comment