கனவில் மட்டும் !!!உன் நுனிவிரல் தொடுதலில்

நான் உன் வசமாகும்

கற்பனையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது

கனவில் மட்டும்

நாம் கணவன் மனைவி ஆகிவிடுவதால் !

ஆதரவாய் தோள் சாய்ந்து,

ஆசையாய் கைக்கோர்த்து,

நடந்துசெல்லும் பாதையெல்லாம் இனிமையாக இனிக்கிறது

கனவில் மட்டும்

நாம் காதலர்கள் ஆகிவிடுவதால் !

உன்னுடன் பேசி, சிரித்து,

சண்டைப்போட்டு பின் சேர்ந்துவிடும்

குறும்பெல்லாம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது

கனவில் மட்டும்

நாம் நண்பர்கள் ஆகிவிடுவதால் !

லேசான முக வாட்டத்திற்கும் பதறிப்போய்

என் மடியில் உன்னைத் தாலாட்டும் பொழுதெல்லாம்

தாய்மையை உணர வைக்கிறது

கனவில் மட்டும்

நான் உன் அன்னை ஆகிவிடுவதால் !

எதற்கும் அழவிடாமல்,

என்றுமே உடனிருந்து,

எனக்கு ஊன்றுகோலாய் இருக்கும் போதெல்லாம்

பாதுகாப்பைத் தருகிறது

கனவில் மட்டும்

நீ என் தந்தை ஆகிவிடுவதால் !

உன்னுடைய எல்லா உறவுகளுமாய்

என்றுமே வாழும் வாழ்க்கை பிடித்திருகிறது

கனவில் மட்டும்

எல்லா உரிமைகளும் இருப்பதால் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

12 comments :

• » ѕαктнι « • รค╬ђเรђ ╰» ραℓαηι said...

அருமை அருமை...

Hemalatha Gopalakrishnan said...

very nice dear. Touching.....

indu said...

மிகவும் நன்றி சக்தி

indu said...

Thanks hema... Happy to see ur comment in my blog...:)

Anees Ahmad Karur said...

nice...sumthng real....

indu said...

Thanks for ur comment Anees Ahmad:)

ahilamurali said...

really nice.........

indu said...

Hi ahila, thanks a lot for ur comment... feeling happy...:):)

ParthiDreams said...

Nice words

indu said...

Thanks parthi:)

Anonymous said...

very nice

indu said...

Thanks:)

Post a Comment