பாழாய்ப்போன மனதுநாட்கள் நகர்ந்து,

மாதங்கள் மறைந்து,

ஆண்டுகள் பல கடந்த போதிலும்

உயிருக்குள் எங்கோ புதைத்துவிட்ட உன்னை

அகற்றுவதற்கு ஏனோ மனம் வரவில்லை...!

தினமும் சந்திக்கும் அத்தனை மனிதர்களிலும்

உன்னைத் தேடுவதற்கு மட்டும்

மறந்ததில்லை இந்த மனது...!

என் உலகமே நீயாய் இருக்கும்போது

உன் உலகத்தில் என் நிழல்கூட

இல்லாமல் போனதை ஏற்கும் துணிச்சல்

என்றுமே வந்ததில்லை இந்த மனதிற்கு...!

உண்மைக்காதல் எதுவென்றறிய

ஊரெல்லாம் தேடினாலும்

எதிரே நிற்பதென்னவோ

பாழாய்ப்போன இந்த மனம் தான்...!


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments :

srini said...

pazai pona manadhu matratharku udaviyade

indu said...

:)

Uvaraj said...

That's very true:-)

Post a Comment