நிறைவான வாழ்வுஉனக்கும் எனக்கும் முன் அறிமுகம் இல்லை..

அப்பா அம்மா பார்த்து செய்த திருமணம் தான்..

காதல் வார்த்தை பேசியதில்லை,

கண் குளிர ரசித்ததுமில்லை

இனம் புரியா உணர்வுகளால்

இதயம் முழுக்க நீ மட்டுமே நிறைந்திருந்தாய்...!

நமக்கென்று குழந்தையில்லாமல்

உனக்கு நானும் எனக்கு நீயும்

வாழ்ந்து வந்தோம்...!

விட்டு சென்ற உறவுகள் பல

இருந்தும் வலித்ததில்லை

என்னவன் நீ உடன் இருந்ததால்...!

கணவன் மனைவியாய்

சுற்றி வந்த இடங்களுக்கு

கைம்பெண்ணாய் சென்று வர பிடிக்கவில்லை...!

என் தனிமையைப் போக்க

உன்னைத்தவிர வேறு சொந்தமில்லை...!

எப்படி சொல்வேன்..

நீயில்லா உலகில்

நான் மட்டும் வாழும் நிலையை...!

இருந்தும் நிம்மதி தருவது

நாம் வாழ்ந்த நிறைவான வாழ்வின் நினைவுகள் மட்டுமே...!


Dedicated to my Grandpa who passed away recently
Words on behalf of my Grandma

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

5 comments :

sudhakarSalem said...

very touching super :)

ravikumarsivamani said...

Nice to read.. done a good job for ur grandpa.. Keep it up Indu

indu said...

Thank you Sudhakar and Ravi Anna... :)

Uvaraj said...

Keep it up ... Nice lines:-)

அருள்மொழிவர்மன் said...

Meaningful life & meaningful lines...

Post a Comment