அன்பின் சங்கமம்


சில்லென்ற காற்றும்
சின்னத் தூரலும் அட்சதை தூவ
கிழக்கே குவிந்திருக்கும் மேகமும்
மேற்கே நிறைந்திருக்கும் சூரியனும்
வானவில் மாலையிட்டு மணந்து கொள்கிறது !
இயற்கையின் இந்த அழகான காதலில்
நனைந்து கொண்டிருக்கிறேன்
கண் சிமிட்டும் நேரத்தில்
வானவில்லின் வர்ணம் கரைந்து
மேகங்கள் கலைந்து
சூரியனும் மறைந்துவிட்டது !
வானம் தவிர்த்து
வந்து விழும் மழையை
பூமி அணைத்து முத்தமிட்டது !
மழை நின்றதும்
துளிர்த்து நிற்கும் செடிகளில்
சிரிக்கும் பூக்களைச்
சுற்றி திரியும் வண்ணத்துப் பூச்சிகள் !
இவை நிரந்திரமில்லா பொழுதில்
சங்கமிக்கும் நிலையான காதல்கள் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment