ரகசியம்


அடர்ந்த இருளும்
அழகான நிலவும்
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இரவில்
அமைதியே நிலவுகிறது..!
அருகில் நீ இருந்திருந்தால்
ஆயிரமாயிரம் கதைகள் பேசியிருப்பேன்..
எல்லாமே சலனமற்று கிடக்கையில்
உரசிச் செல்லும் தென்றல்
மட்டும் ஏதோ ரகசியம் சொல்லிப் போகிறது..!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment