வாழ்க்கைப் பக்கங்கள்


வீசியடிக்கப்படும் புயல் காற்றைப்போல்
வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை..
நினைத்துப் பார்க்கவோ, ரசித்துச் சிரிக்கவோ
நினைவுகளை சேமிக்க மறந்து கொண்டிருக்கிறேன்..
மனித இயந்திரமாய் மாறிப்போன வாழ்க்கையில்
மறைந்திருக்கும் பழைய நினைவுகளும்
உடன் வந்து உயிர் கொடுக்க மறுக்கிறது..
வாழ்க்கை புத்தகத்தின் புதிய பக்கங்களை எழுத
வார்த்தைகளும் இல்லை
மங்கிப்போன பழைய நினைவுகளின் சுவடுகளும் இல்லை..
கேள்வி பதிலாய் இருக்கும் நாட்கள் மாறி
அத்தனையும் அன்பாய் வாழும் பதிவுகளுக்காக
அமைதியாக காத்துக்கொண்டிருக்கின்றன
வாழ்க்கைப் பக்கங்கள் !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment