தேய்பிறை கண்ட இரவில்
நிலவின் ஆளுமையில்லா பொழுதில்
நட்சத்திரங்கள் அனைத்தும்
ஆர்ப்பரித்துச் சிரிக்கிறது !
எல்லா விண்மீன்களிடமும்
உன்னைப்பற்றித் தான் பேசினேன்
அத்தனையும் சேர்ந்து
உன் பெயரைச் சொல்லி
என்னைப் பரிகாசம் செய்யத் தொடங்கியதும்
கொட்டித் தீர்க்கிறது
இந்த மார்கழிப் பனிமழை !
0 comments :
Post a Comment