மாறாத மாற்றங்கள்


அடுத்தடுத்து வந்து கால் நனைத்துச் செல்லும்
கடலலை போல
புதுப் புது உறவுகளாய் வந்து
உள்ளம் தொட்டுச் செல்லும் நண்பர்கள்
எப்போதும் உடனிருக்கும் அவர்களின்
சின்னச் சின்ன மாற்றங்கள் கூட 
நிம்மதியை பதம் பார்த்து விடுகிறது !
மாற்றங்களும் அழகு
மனிதர்களும் அழகு
கொஞ்சம் விட்டுக் கொடுத்து
புரிந்து கொள்ள முற்பட்டால்
வாழ்க்கையும் அழகு !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment