முரண்பாடுகள்


அளவில்லா மகிழ்ச்சியை  
அழகாய் வெளிப்படுத்தும் 
சின்ன சின்ன கண்ணீர்த் துளிகள்! 
மாறாத சோகத்தை 
மெல்லிய புன்னகையில்
மறைத்து வைக்கும் இதழ்கள்! 
தீர்க்கமான முடிவுகளை   
அழுத்தமாக சொல்லிவிடும் மௌனம்! 
காயம் தந்த நெஞ்சை 
அமைதியாக நேசிக்கும் உள்ளம்!
இமைகள் கடந்து  
இதயத்தில் பதியும் எல்லாமே
அழகிய முரண்பாடுகள் தான்! 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment