நான்இன்று தான்
முதன் முதலில் என்னைச்சுற்றி
நெருங்கிய சொந்தங்கள்
கண்ணீர் மல்க எல்லோரும்...!
உறவினர்கள், நண்பர்கள்
வந்து செல்ல
என் குடும்பத்தினர் மட்டும்
பித்துப்பிடிதவர்களாய்...!
ஆறுதல் சொல்ல நினைக்கிறேன்
ஆயினும் முடியவில்லை...!
அமைதியாய் கண்மூடியிருக்கிறேன்...!

கருவில் உதித்து
கவனமாய் வளர்க்கப்பட்ட நாட்கள் !
சிறுமியாய் என் இல்லத்தில்
சுற்றித் திரிந்த நாட்கள் !
பக்கத்துவீட்டு குழந்தைகளுடன்
விளையாடித் திரிந்த நாட்கள் !
பள்ளி விடுமுறைக்காக காத்திருந்து
பூர்வீகம் சென்ற நாட்கள் !
கல்லூரிக்குச் சென்று
நண்பர்களுடன் வாழ்ந்த நாட்கள் !
வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்
என் மனக் கண்முன்
பிம்பங்களாய் தோன்றி மறைகிறது !

பின்
வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்தித்து
சலித்துப் போய் ...!
இதோ,
நான் சிரித்து , அழுது , ரசித்து
வாழ்ந்த இல்லத்திலேயே
உயிரற்ற உடலாக ...!
இன்னும் சற்று நேரத்தில்
இங்கிருந்து பிரிந்து
தனிமைத் தீயில்
நானும் கருகிடுவேன்...!
இருந்தும் நானின்றி அழுத
அடுத்த வீட்டு குழந்தைக்கு
ஆறுதல் சொல்கிறார்கள்
நான் கடவுளிடம் சென்றுவிட்டதாய்...!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments :

Hemalatha Gopalakrishnan said...

Nice one indu...

indu said...

Thanks hema:)

guru said...

அருமையான உணர்வு!!

அருள்மொழிவர்மன் said...

gooddd

Post a Comment