சிந்தித்துப் பார்க்க...மழைக்காலத்தில் எல்லாம்
தூரலாய் வந்து
உன்மேல் விழுகிறேன்
ஒருமுறையேனும் ரசித்திருப்பாயா ?

கோடையில் எல்லாம்
அனலாய் வந்து
உன்னை அணைக்கிறேன்
ஒருமுறையேனும்
ஏற்றிருப்பாயா ?

காற்றாய் வந்து
காதலாய்த் தீண்டி
உன்னுடன் கலந்திருக்கிறேன்
ஒருமுறையேனும்
அறிந்திருப்பாயா ?

பனிக்காலத்தில் எல்லாம்
குளிராய் வந்து
உனக்குள் படர்ந்திருக்கிறேன்
ஒருமுறையேனும் விரும்பியிருப்பாயா ?

இனியேனும் கற்றுக்கொள்
இயற்கையாய் இருக்கும்
என் அன்பை நேசிப்பதற்கு !

Dedicated to Mother of Nature

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

அருள்மொழிவர்மன் said...

அழகான கவிதை, வாழ்த்துக்கள்.

indu said...

நன்றி அருள் :)

Post a Comment