காதலும் கற்பனையும்கொழுந்துவிட்டு எரியும் தீயின் முன் நானும்

அமைதியாய் வந்து அருகில் அமர்ந்து

தோளில் கைப்போடும் நீயும்

சேர்ந்தே ரசிக்கிறோம்

எதிரே எரியும் தீயையும் நம் காதலையும் !


ஆகாய கங்கையாய் கொட்டும் அருவியின் கீழ் நானும்

அதை அறியாமல் அருகில் வந்துவிடும் நீயும்

சேர்ந்தே நனைகிறோம்

உச்சந்தலையில் கொட்டும் நீரிலும் நம் காதலிலும் !உறக்கம் இல்லாமல் நிலவைப் பார்க்கும் நானும்


அதை உணர்ந்து துணையாய் வந்து நிற்கும் நீயும்

சேர்ந்தே நேசிக்கிறோம்

ஆசிர்வதிக்கும் நட்சத்திரத்தையும் நம்மிடையேயான காதலையும் !


ஏதோ நினைவுகளில் நடந்துவரும் நானும்

எதிரில் வந்து நிற்கும் நீயும்

விலகாமல் பார்க்கிறோம்

மோதிய மூச்சுக்காற்றையும் முன்னே இருக்கும் காதலையும் !


தரையில் தவறி விழுந்த நானும்

தவிப்போடு கைக்கொடுத்த நீயும்

புரிந்தே பிரிகிறோம்

தவறிய நிலத்தையும் நிலைத்துவிட்ட காதலிலும் !


மறைந்துபோன காலமும்

அதில் தொலைந்துபோன நானும்

சேர்ந்தே வாழ்கிறோம்

கலைந்து போகாத கற்பனையிலும்

மறந்து போகாத காதலிலும் !


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

8 comments :

நாணல் said...

:) நடக்கட்டும் நடக்கட்டும்...

tryeverythingsudhakar said...

superb one indhu

sutha said...

Keep it up. IS this true or not?

Uvaraj said...

Nice one Indu :-)

Rajalakshmi Subramaniam said...

excellent

indu said...

Thank you all for ur comments... :)

saran said...

:)

Anonymous said...

yarunga adhu? :) sollave illa
by
sudhakar

Post a Comment